Saturday, March 29, 2008

பாலுறவுக்கு ஒரு பயன்மிகு மென்பொருள் - Cycle

முதல் "மாதப்போக்கினை"(menstruation) விரைவில் எதிர்கொள்ளவுள்ள, எதிர்கொண்டுவிட்ட பெண்களுக்கு உதவக்கூடிய மென்பொருள்(Software) இது. அதிலும் குறிப்பாக அவர்கள் ஆண் பாலுறவுத் துணைவர்களைப்(sex partners) பெற்றிருக்கும் நிலையில் இம்மென்பொருள் மிகவும் பயன் தரக்கூடியதாக இருக்கும்.

மாதந்தோறும் மாதப்போக்கு ஆரம்பிக்கும் நாட்கள், கருத்தடை மருந்துகளை உபயோகிக்கும் நாட்கள் போன்ற உள்ளீடுகளைக்கொண்டு இம்மென்பொருள் எதிர்வுகூரல்களைச் செய்கிறது.

இம்மென்பொருளின் பெயர்

கருவுற விரும்புபவர்கள் சேர்க்கை(intercourse) கொள்ளக்கூடிய நாட்களையும், கருவுறாமல் தவிர்க்கக்கூடிய நாட்களையும் பருமட்டாகக் கணக்கிட்டு அறிவிப்பதுடன், குழந்தை பெற விரும்பும் பட்சத்தில் குழந்தையின் பிறக்கும் திகதியை தீர்மானிக்கக்கூடிய, அதற்கான சேர்க்கை நாளைக் கணக்கிடக்கூடிய வசதிகளையும் இது தருகிறது.



கருவுறும் (அல்லது கருவுறா) நாட்களைக் கணக்கிடுவதற்கு பல முறைவழிகள் உண்டு. அதில் நாட்காட்டி முறை (Calendar-based method) பிரபலமானது.

(நாட்காட்டி முறை தொடர்பான மேலதிக விளக்கங்களுக்கு இங்கே செல்லுங்கள்)

கருவுற விரும்புபவர்கள் சரியான நாட்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள இது மிகவும் பயன்படும்.

கருவுற விரும்பாதவர்களுக்கு ஏனைய கருத்தடை முறைகளோடு ஒப்பிடும்போது நாட்காட்டி முறை அவ்வளவு நம்பத்தகுந்ததல்ல. ஆனாலும் மிக அடிப்படையான ஒரு முறை என்ற அளவில் பரவலாகப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கிறது. (மற்றைய கருத்தடை வழிகள் எல்லோருக்கும் தடையின்றிப் பெறத்தக்கதாக எல்லா நேரத்திலும் இருந்துவிடுவதில்லை)

இம்மென்பொருளின் கணிப்பீடுகள் மிகவும் பருமட்டானவை. இதனை நூறுவீதம் நம்ப வேண்டாம். 'அங்கீகரிகப்பட்ட' உறவில் சேர்ந்து வாழ்பவர்கள் கருவுற விரும்பாவிடில் இம்மென்பொருளின் எதிர்வுகூரல் தவறும் பட்சத்திலும் கூட மாற்று வழிகளை இலகுவில் பெற முடியும். ஏனையவர்கள் மிகவும் அவதானமாக இருக்கவும்.


இதனைப்பயன்படுத்தும் வழிமுறைகள் மிக எளிமையானவை.

ஒவ்வொரு மாதத்திலும் மாதப்போக்கு ஆரம்பிக்கும் நாளை இதிலுள்ள நாட்காட்டியில் சொடுக்கிக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். ஆகக்குறைந்தது ஆறு மாத காலத்துக்கு குறித்து வைக்க வேண்டும். கருத்தடை மருந்து பயன்படுத்துபவர்கள் அந்தத் தகவலையும் குறித்து வைக்கக்கூடிய வசதிகள் உண்டு.



இவ்வாறு குறித்து வைத்ததும் கருவுறக்கூடிய நாட்கள் பச்சை நிறத்தில் காண்பிக்கப்படும். கருவுறா நாட்கள் மெல்லிய brown நிறத்தில் காண்பிக்கப்படும்.




ஏனைய எதிர்வுகூரல்கள் கணிப்பீடுகளைப் பெறும் வழிமுறைகள் மென்பொருளின் உதவிக்குறிப்புக்களில் விளக்கப்பட்டுள்ளது.


பலர் பயன்படுத்தும் கணினிகளில் உங்கள் சொந்தத் தரவுகளைக் கடவுச்சொல் கொடுத்து பூட்டி வைத்துக்கொள்ள முடியும்.

மென்பொருள் பைத்தன் மொழியில் wxpython பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது.
முற்றிலும் கட்டற்ற மென்பொருள்
க்னூ/லினக்சில் பிரச்சினைகள் எதுவுமின்றி இயங்கும்.

மென்பொருளைப்பெற்றுக்கொள்ள இங்கே செல்லுங்கள்.

டெபியன்/உபுண்டு இயங்குதளங்களில்
apt-get install cycle ன்ற ஆணையை வழங்கி நிறுவிக்கொள்ளலாம்.

கருவுறுதல், மாதப்போக்கு தொடர்பான மருத்துவ அறிவுள்ளவர்கள் இங்கே சொல்லப்பட்ட தகவல்களில் தவறெதுவும் இருந்தால், இம்மென்பொருள், நாட்காட்டி முறை ஆகியவற்றைப்பற்றிய மேலதிக தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்பினால் இங்கே பின்னூட்டமிட்டு உரையாட முன்வாருங்கள்.

4 comments:

said...

//முதல் "மாதப்போக்கினை"(menstruation) விரைவில் எதிர்கொள்ளவுள்ள, எதிர்கொண்டுவிட்ட பெண்களுக்கு உதவக்கூடிய மென்பொருள்(Software) இது. அதிலும் குறிப்பாக அவர்கள் ஆண் பாலுறவுத் துணைவர்களைப்(sex partners) பெற்றிருக்கும் நிலையில் இம்மென்பொருள் மிகவும் பயன் தரக்கூடியதாக இருக்கும்.//

முதல் மாதவிடாய், செக்ஸ் பார்ட்னர்"ஸ்" பயன்தருதல்...

என்ன சொல்ல வாறீங்க மயூரன்?

said...

//முதல் மாதவிடாய், செக்ஸ் பார்ட்னர்"ஸ்" பயன்தருதல்...

என்ன சொல்ல வாறீங்க மயூரன்?

//

முதல் மாதப்போக்கினை சந்தித்தபின்னர்தான் கருவுறுதல் பற்றிய அக்கறைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று சொல்லவந்தேன்.

said...

இந்த விசயத்தில பயங்கர எக்ஸ்பேர்ட் ஆகிட்டீங்க போல...!! ;)

வாழ்த்துக்கள்

said...

http://sexualityandu.ca/adults/contraception-choosing.aspx